பலவகைச் செய்தித் துணுக்குகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பலவகைச் செய்தித் துணுக்குகள்

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது!

எஸ் தில்லைநாதன்

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடி படகில் இருந்த 10 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு கடல் பகுதியில் நேற்று செவ்வாய்அதிகாலை 2 மணியளவில் திருகோணமலை கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நாயாறு கடற்பகுதியில் ட்ரோலர் மீன்பிடி படகு ஒன்றை அவதானித்தனர்.

குறித்த படகில் இருந்தோரிடம் விசாரணை செய்தபோது அவர்கள் இந்தியாவில் இருந்து மீன்பிடிக்க வந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களைக் கடற்படையினர் கைது செய்தனர்.

மாணவர் பாலியல் துஷ்பிரயோகம்

(ஏ.எல்.எம்.சலீம்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் விளையாட்டுத் துறை ஆசிரியராக கடமையாற்றும் இந்நபர், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதியன்று விளையாட்டு அலுவலக அறையில் வைத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

எனினும் பல நாட்கள் கடந்தும் பாடசாலை நிர்வாகத்தினால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இதையடுத்து தலைமறைவான ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (06) பொலிஸாரிடம் சரணடைந்தார். இவரை சம்மாந்துறை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய போது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வைக்குமாறும் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பாடசாலை அதிபரை ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

சாய்ந்தமருதில் சமுர்த்தி உத்தியோகத்தர் கைது

(ஏ.எல்.எம்.சலீம்)

02 பிள்ளைகயின் தாயான பெண்ணொருவருக்கு வட்அப்ஸ் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பி பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை சாய்ந்தமருது பொலிஸார் திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் 41 வயது நிரம்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது ஆணுறுப்பு புகைப்படத்தை பல தடவைகள் இப்பெண்ணின் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், தையல் மெசின் உட்பட வாழ்வாதார உதவிகள் தருவதாகக் கூறி, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

சங்கானையில் கசிப்புடன் பெண்ணொருவர் கைது...!

எஸ் தில்லைநாதன்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை சேர்ச் வீதி பகுதியில் கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41வயதுப் பெண் ஒருவர் இன்று செவ்வாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 5 லீற்றர் கசிப்பு, 20 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் முன்னரும் ஒரு தடவை கசிப்புடன் கைதாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணை, மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காசோலை மோசடியில் ஈடுபட்டவர் யாழில் ஓராண்டுக்கு பின்னர் கைது!

எஸ் தில்லைநாதன்

யாழில் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டுப் பணத்துக்கு பதிலாகக் காசோலையொன்றைக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வாகனத்தினை விற்ற நபர் , காசோலையை வங்கியில் வைப்பிலிட்டபோது, அந்தக் கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது.

அதேவேளை, வாகனத்தை வாங்கிய நபர் வாகனத்தோடு தலைமறைவாகி இருந்த நிலையில் வாகனத்தை விற்றவர் இது தொடர்பில் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காசோலை மோசடி செய்தவரை சுமார் ஓராண்டு கால பகுதிக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் வாங்கிய வாகனம் மாவிட்டபுரம் பகுதியில் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் மின்னொழுக்கு ஏற்பட்டு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)