நீரழிவு நோயாளர்கள் தொகை அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? - விளக்குகிறார் வைத்திய கலாநிதி ஆர்.மணிவர்ணன்

இன்றைய சமூகம் பழமை உணவு வகைகளை கைவிட்டும்,
வீடுகளிலே எமது முன்னோர் கையாண்டு வந்த வீட்டு வேலைகளை கைவிட்டும், உடலுக்கேற்ற பயிச்சிகளை பெறாமையால் இன்று பலர் நீரழிவு நோய்களுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளுகின்றார்கள் என மருத்துவ அத்தியட்சகரும், மாவட்ட ஆயுள்வேத ஒருங்கிணைப்பாளருமான வைத்திய கலாநிதி ஆர்.மணிவர்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ் பல்கழைக்கழக சித்த மருத்துவ அலகும் அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணைந்து உலக நீரழிவுவாரத்தை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாமை சனிக்கிழமை (04.12.2021) மன்னாரில் பேசாலை மன்.சென் மேரிஸ் வித்தியாலயத்தில் முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பால் 3 மணி வரை நடாத்தினர்

இம் மருத்துவ முகாமுக்கு தலைமைதாங்கிய மருத்துவ அத்தியட்சகரும், மாவட்ட ஆயுள்வேத ஒருங்கிணைப்பாளருமான வைத்திய கலாநிதி ஆர்.மணிவர்ணன் இங்கு இதை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில்;

மன்னார் மாவட்டத்தில் யாழ் பல்கழைக்கழக சித்த மருத்துவ அலகும், அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணைந்து நடாத்தும் முதல் முறையாக நடாத்தும் ஒரு நிகழ்வாக இது அமைகின்றது.

இந் நிகழ்வானது உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது. ய ந்

இன்று உலகத்திலே இந்த நீரழிவு நோயினால் பலர் பீடிக்கப்பட்டிருப்பது நாம் அறிந்த விடயமாகும்.

இந்த நோயிலிருந்து ஆயுள்வேத மருத்துவத்தின் மூலமும், எமது உணவின் மூலமும் நாம் எவ்வாறு விடுவிக்கப்படலாம் என்பதையும் நாம் அறிந்து எமது வாழ்க்கைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

எமது பாரம்பரிய உணவு வகைகளையும் நிகழ்வுகளையும் நாம் கைவிட்ட நிலையே இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல் தற்பொழுது உடல் உழைப்பு அதாவது உடற்பயிற்சிகள் இக்காலக்கட்த்தில் அற்று போய்விட்டது.

அதிகமானோர் நடை பயிற்சி எடுப்பதில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு குறுகிய தூரத்துக்கு சென்று வருவதற்கும் மோட்டர் சைக்கிளைப் பாவிப்பவர்களாக இருக்கின்றார்களே தவிர, துவிச்சக்கர வண்டி ஓடுவதையும் தவிர்த்து விட்டனர்.

இவ்வாறு இன்று வீடுகளில் உரல் உலக்கை இல்லாத வீடுகளாகவே காணப்படுகின்றது. எமது முன்னோர் வீடுகளில் உரல் உலக்கை கொண்டு அரிசி போன்ற பொருட்களை இடித்து தங்களை அறியாமேல தங்கள் உடலை சீராக வைத்திருந்தனர்

ஆனால் இப்பொழுது இது மாற்றம் அடைந்து உடன் உணவு வகைகளில் மோகம் கொண்டு நாம் உடலை நோயுடன் வைத்திருப்பதையே காண்கின்றோம்.

அன்று எமது நாளாந்த உணவு பழக்கங்கள்கூட சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக காணப்பட்டது. இப்பொழுது நோய்களை அதிகரிக்கும் உணவு வகைகளையே இன்றைய சந்ததினர் கையாண்டு வருகின்றனர்.

நாம் இன்று பழமையை நோக்கி செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். கையால் அரிசி இடித்து, கிடுகு பின்னி இவ்வாறு நமது உடலுக்கேற்ற பயிற்சிகள் கொண்ட வேலைகளை செய்வோமாகில் நாம் எமது முன்னோர் போன்று உடல் உள நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இது வழி சமைக்கும் என்றார்.

நீரழிவு நோயாளர்கள் தொகை அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? - விளக்குகிறார் வைத்திய கலாநிதி ஆர்.மணிவர்ணன்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House