நிவாரணப் பொருட்கள் இலங்கை உற்பத்திகளே!! சுட்டிக்காட்டிய செஞ்சிலுவை – சமையல் ரிப்ஸ் வழங்கும் தூதுவர்
நிவாரணப் பொருட்கள் இலங்கை உற்பத்திகளே!! சுட்டிக்காட்டிய செஞ்சிலுவை – சமையல் ரிப்ஸ் வழங்கும் தூதுவர்

சீனாவின் நிவாரண திட்டத்தில் வழங்கப்பட்டிருந்த சர்ச்சையை ஏற்படுத்திய அரிசி நிவாரண திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் வந்த சீனாவின் உதவி தூதுவர் ஹூ வெய் நேற்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஊடாக வழங்கிய நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இதன் பின்னர், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் கே. பாலகிருஷ்ணன் தகவல் அளிக்கையில்,

துயர் பகிர்வோம்

சீன அரசாங்கம் வழங்கிய அரிசி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், இப்போது நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டது - கொள்வனவும் செய்யப்பட்டது. அரிசி மட்டுமல்ல வழங்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை. வழங்கப்பட்ட ஒரு பொதி 8 ஆயிரம் ரூபாய் பெறுமதியானவை என்றும் கூறினார்.

சீன அரசாங்கம் வழங்கிய அரிசியை சில நிமிடங்களே சமைக்க வேண்டும். அதனை, மிதமான வெப்பத்தில் றைஸ் குக்கரில் சமைப்பதற்கே பொருத்தமானது என்று சீனாவின் உதவித் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (29) நிவாரணப் பொதிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுடன் அவர் உரையாடினார்.

இதன்போது, சீனா வழங்கிய அரிசி தொடர்பில் சமூகவலைதளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதைக் கேட்ட அவர், தாம் வழங்கும் அரிசியை மிதமான வெப்பத்தில் றைஸ் குக்கரில் சமைக்க வேண்டும். சில நிமிடங்களே சமைக்க வேண்டும் என்று விளக்கமளித்தார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பாக தாம் தூதரகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறார் என்றும் கூறினார்.

நிவாரணப் பொருட்கள் இலங்கை உற்பத்திகளே!! சுட்டிக்காட்டிய செஞ்சிலுவை – சமையல் ரிப்ஸ் வழங்கும் தூதுவர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More