
posted 2nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நிந்தவூர் மதீனா அணி 2ஆம் இடம்
விளையாட்டுத்துறை அமைச்சால் நடத்தப்படும் 48 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி கிளிநொச்சியில் இடம்பெற்று வருகிறது. இந்த விளையாட்டு நிகழ்வின் கபடி போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் மதீனா அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
48 வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக இம்முறை வெள்ளிப் பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற அணி இம்முறை 2 புள்ளிகள் அதிகம் எடுத்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)