
posted 9th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நிந்தவூரில் பிறை மாநாடு
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு நடத்தும் பிறை மாநாடு ஒன்று கிழக்கிலங்கையின் நிந்தவூரில் நடைபெறவிருக்கின்றது.
இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரியும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.முஹம்மத் சாலிஹீனின் மேற்பார்வையிலும், நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசலின் ஏற்பாட்டிலும் இந்த பிறை மாநாடு நடைபெறவுள்ளது.
முஸ்லிம் மக்களின் பிறை பார்த்தல் தொடர்பான பல்வேறு விடயங்களுக்கும் தெளிவூட்டும் வகையிலான இந்த மாநாடு எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற விருக்கின்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் உஸ்தாத் கலீபதுஷ் ஷாதுலி எம்.பீ.எம்.ஹிஷாம் (அல்பத்தாஹி) தலைமையில், நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை, மண்டபத்தில் இந்த முக்கிய மாநாடு நடைபெறும்.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட வானிலை அதிகாரியும், கொழும்பு பிறைக்குழு உறுப்பினருமான கலாநிதி சாலிஹீனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் மாநாட்டின், ஆரம்பத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் உஸ்தாத் கலிபதுல் ஷாதுலி எம்.பீ.எம்.ஹிஷாம் (அல் பத்தாஹி) தலைமை உரை நிகழ்த்தி மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.
மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உப செயலாளர் மௌலவி. எம்.ஆர்.அப்துல் ரஹ்மான் (அல் ஹிலாலி) “பிறையும் வானியலும்” எனும் தலைப்பிலும், கொழும்பு, பிறைக்குழு செயலாளர் உஸ்தாத் ஏ.எல்.எம்.மஸீன் அல் மக்தூமி (அல் ஹஸனீ) “சர்வதேசப் பிறை” எனும் தலைப்பிலும், கொழும்பு பிறைக்குழு உறுப்பினர் உஸ்தாத் சீ.ஐ.எம்.அஸ்மீர் (அல் ஹஸனீ) “பிறை விவகாரத்தில் சாட்சியத்தின் வகிபாகம்” எனும் தலைப்பிலும் பேருரைகள் ஆற்றவுள்ளனர்.
மாநாட்டின் இறுதியில் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் மௌலவி எம்.எம்.கமறுதீன் (ஷர்க்கி) நன்றியுரையாற்றுவதுடன், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம கதீப் உஸ்தாத் எஸ்.எம்.எம்.தல்ஹா (அல் பாரி) வின் துஆ பிரார்த்தனையும் இடம்பெறும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)