
posted 21st March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நாவற்குழியில் பெளத்த விகாரை - கவனவீர்ப்புப் போராட்டம்
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா நாவற்குழி பெளத்த விகாரைக்கு வருகை தந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சனி (18) பிற்பகல் 2 மணியளவில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாவற்குழி விகாரைக்கு செல்லும் பிரதான வீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது;
- தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு!
- இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா வெளியேறு!
- நிறுத்த நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து!
- வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு!
- நாற்குழி விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம்!
- திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை நிறுத்து!
- நாவற்குழி தமிழர் தேசம் !
ஆகிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணி தலைவி வாசுகி சுதாகர் உட்பட்ட பலர் கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)