
posted 3rd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நான்கு மாணவர்கள் சித்தி
வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை வீரத்திடல் அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தில் முதல் முறையாக நான்கு மாணவர்கள் மூன்று ஏ சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இம்மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் வாழ்த்துத் தெரிவித்து பாராட்டிக் கௌரவித்தார்.
இதன் போது எம்.எஸ்.எப். ஹஸ்னா, என். ஷப்னம் சேபா, எம்.எப். நப்றினா, ஏ.ஏ.எப். அனீசா ஆகிய நான்கு மாணவர்கள் வாழ்த்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மிகவும் வறுமைப்பட்ட பிரதேசத்தில் உள்ள மேற்படி மாணவர்களின் பெரு முயற்சியையும் சாதனையையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரதும் கடமை என அமைப்பாளர் மாஹிர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)