
posted 14th January 2023
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் நேற்று (13) வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து பேரணியாகச் சென்று மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத் தினைக்களத்திலும், அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)