துரத்தி அடிப்போம்

இலங்கையில் இனவாதம், மத வாதத்தைப் பயன்படுத்தி ஆட்சி பீடமேறிய இன்றைய ஆட்சியினர் நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டு, அவர்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். மக்கள் நலனைத்துச்சமமாகக் கொள்ளும் இன்றைய அரசை துரத்தியடிப்பதற்கு அனைவரும் ஒன்றுபடவேண்டும்.”

இவ்வாறு, கிழக்கு மாகாணம், சாய்ந்தமருதுவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் மன்றம் நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

“சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு” எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வு சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் கல்முனைப் பிராந்திய ஒருங்கினைப்பாளர் ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கிலங்கையில் அதுவும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் முதன் முதலாக நடைபெற்ற தமது மக்கள் மன்றம் நிகழ்வுக்கு மக்களின் பேராதரவு கிடைத்தமையையிட்டு பெரு மகிழ்வும், புதிய உத்வேகமும் கொள்வதாகத் தமது உரையில் குறிப்பிட்ட தலைவர் அனுரகுமார திசாநாயக்க,
இனவாதம், மதவாத மற்றும் தேசிய ஒற்றுமைக்காகவும், சீரழிக்கப்பட்டுவிட்ட நாட்டை புதிய பாதைக்கு இட்டுச் செல்லவுள்ள அரசியல் மாற்றத்திற்காகவும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையுமாறும் அறைகூவல்விடுத்தார்.

தலைவர் அனுரகுமாரதிசாநாயக்க தமது சிறப்புரையில் மேலும் பின்வருமாறு கூறினார்.

“ராஜபக்ஷக்கள் கடந்த பொதுத்தேர்தலிலும், ஜனாதிபதித்தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சிபீடமேறுவதற்காக இனவாதத்தையும், மதவாத்தையுமே துரும்புச்சீட்டாகக் கையிலெடுத்தனர்.

ஆட்சிக்கு வருவதற்கு ஒரே ஒரு நச்சு வழியாக அவர்கள் விதைத்த இனவாதத்தாலும், மதவாதத்தாலும் நாடும், மக்களும் சின்னாபின்னமாகி நாடு இன்று ஏழை நாடாக ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துகிடப்பதுடன், நாட்டு மக்களும் துன்ப, துயரங்களுடன், வாழ்வுரிமைகள் இழந்து, பெருந்துயரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.

வளங்கள் நிறைந்த சிறப்புடன் திகழ்ந்த நாட்டையும், மக்களையும் இனவாத, மதவாத செயற்பாடுகளைத் தூண்டி, ராஜபக்ஷக்கள் மிக மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

கருத்தடைகொத்து ரொட்டி, டாக்டர் சாபியின் கருத்தடைசத்திர சிகிச்கை போன்ற பித்தலாட்ட புனைவுகளை நம்பிமக்கள் ஏமாந்துள்ளனர்.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் அதிகாரம் பெறுவதற்கு ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சியே என்ற சந்தேகங்கள் தற்பொழுது எழுப்பப்பட்டு வருகின்றன.

இன்று உண்மை நிலமைகளை மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதற்கு ஹம்பாந்தோட்டையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் நாம் நடத்திக்காட்டிய மக்கள் மன்ற நிகழ்வுக்குத் திரண்ட பெருந்தொகை மக்களே எடுத்துக்காட்டாகும்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை நம் மூவின மக்களும் மிக அந்நியோன்னியத்துடனும், நல்லலிணக்கத்துடனும் வாழ்ந்தோம்.

ஆனால் ஆட்சியினர் நம்மைப் பிரித்தனெரனினும் இன்று அவர்களது முயற்சி பகற்கனவாகியுள்ளது.

குறிப்பாக முஸ்லிம் மக்கள் தமது பாதுகாப்பை, உரிமைகளைப் பெற்றுத்தந்து உறுதிப்படுத்துவார்களென்ற எதிர்பார்ப்புடனேயே முஸ்லிம் காங்கிரசுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பினர்.

ஆனால், அவர்கள் 20ஆவது அரசியலைப்புத்திருத்திற்கு வாக்களித்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை, எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கியுள்ளனர்.

இதில் இக்கட்சிகளின் தலைவர்கள் ஆதரவில்லையென்ற நாடகத்தையும் ஆடினர்.
முஸ்லிம்களும், சிங்களவர்களும் மோதவேண்டும், தமிழர்களும் சிங்களவர்களும் மோத வேண்டும், இனவாதம், மதவாதம் தலைவிரித்தாட வேண்டும்மென்ற நோக்கையே இன்றும் அரசு கொண்டுள்ளது.

வடக்கில் புலிகள், ஆவாக்குழுக்கள் போன்ற அச்சமூட்டல்களின் பின்னணி கூட இத்தகைய நோக்கையே கொண்டவை.

எனவே, எமக்கு மாற்றம் வேண்டும்; நாடு உயிர்ப்பிக்கப்பட வேண்டும்; மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.

இதற்காக முதுகெலும்புடன் இனகுரோதங்களுக்கு எதிராக, தேசிய ஒற்றுமைக்காக தேசிய மக்கள் சக்தி குரல் கொடுத்து வருகின்றது.

புதிய யுகத்தை, புதிய மக்கள் நலனையே நோக்காகக் கொண்ட அரசை தேசிய மக்கள் சக்தியாலேயே உருவாக்க முடியும். எனவே நம்பிக்கையுடன் அனைவரும் ஒன்றிணைவோம்” என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, செயற்குழு உறுப்பினர் அஷ்ஷெய்க். அ. முனீர் முளப்பர் மௌலவி ஆகியோரும் உரையாற்றினர்.

துரத்தி அடிப்போம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House