
posted 10th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தீவைத்து எரிக்கப்பட்ட வாகனம்
ஓட்டுமடம் சந்தியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய் (09) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
மரக்காலை உரிமையாளர் ஒருவரின் வீடு தாக்கப்பட்டு, வாகனம் தீவைக்கப்பட்டுள்ளது. இவரது மகன் முன்னர் குழு ஒன்றுடன் சேர்ந்தியங்கியவர் எனவும், தற்போது பிரான்சில் தஞ்சமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)