திருமுறைப்பண்ணிசைக் கல்லூரி அங்குரார்ப்பணம்

மன்னார் மாவட்டத்தின் பாடல் தளமான திருக்கேதீச்சர ஆலயத்தில் சிவானந்த குருகுலம் சிவகாம வேத திருமுறைப் பண்ணிசைக் கல்லூரி நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

1960 ஆம் ஆண்டுக்கு முன் இளம் ஐயர் குருக்களுக்கு குருகுலம் சிவகாம வேத பாடசாலை திருக்கேதீச்சர ஆலயத்தில் இடம்பெற்று வந்துள்ளது எனவும், பின் பிரச்சனை காரணமாக இப் பாடசாலை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ் இளம் குருக்கள் இந்தியாவுக்குச் சென்று தங்கள் குருகுலப் படிப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே இத் திருமுறைப் பண்ணிசை கல்லூரி மீண்டும் திருக்கேதீச்வர ஆலயத்தில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தருமப்புர ஆதினத்தின் அனுசரனையுடன் ஞாயிற்றுக்கிழமை (05.02.2023) இவ் அங்குராப்பணம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் 12 குருகுல மாணவர்களுடன் திருக்கேதீச்வர ஆலய செயலாளர் எந்திரி எஸ்.எஸ். இராமகிருஷ்ணன் மற்றும் இது தொடர்பானவர்களும் கலந்து கொண்டனர்.

இக் கல்லூரியில் மேலும் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் இவர்கள் தங்கியிருந்து கற்பதற்கான ஏற்பாடுகளையும் தாங்கள் மேற்கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக திருக்கேதீச்வர ஆலய செயலாளர் தெரிவித்தார்.

திருமுறைப்பண்ணிசைக் கல்லூரி அங்குரார்ப்பணம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More