தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூர் பின் வீதியில் உள்ள தீயாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் வியாழக்கிழமை (15) உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது.

நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26 ம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

காலை .930 மணிக்கு ஆரம்பமாகிய நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத மேடையில் அமர்ந்த நேரமாகிய காலை 9.45 க்கு திலீபனின் உவுருவப் படம் மாவீரர் பண்டிதர் அவர்களின் தாயாரினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு முதன்மை சுடரினை பண்டிதர் அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.

தினமும் காலை 9.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். நினைவேந்தல் நிகழ்வுகளின் போது ஒவ்வொரு நாளும் முதன்மைச் சுடரினை மாவீரச் செல்வங்களின் பெற்றோர்கள் ஏற்றிவைப்பதற்கு ஏற்றவகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை அடுத்து இரத்த தான நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More