தார் வீதியாகப் புனரமைப்பு!

'எழுச்சிமிகு மாநகரம்' திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய மூன்றாம் குறுக்கு வீதி மற்றும் திராய்மடு 13ஆம் குறுக்கு வீதி ஆகியவற்றைத் தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியினூடாக மட்டக்களப்பு மாநகர சபையின் மூன்றாம் வட்டார உறுப்பினர் க. ரகுநாதனின் பாதீட்டு முன்மொழிவுக்கமைய 126 மீற்றர் நீளத்தில் சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்கு வீதியும், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ. ஸ்ரீதரனின் பாதீட்டு முன்மொழிவுக்கமைய 136 மீற்றர் நீளத்தில் திராய்மடு 13ஆம் குறுக்கு வீதியும் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

மேற்படி இரு வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபையின் வேலைகள் குழுத் தலைவர் இரா. அசோக், மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் மற்றும் மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான டி.ஜே. கிறிஸ்டிராஜ் மற்றும் ஆர். சுதர்ஷன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

தார் வீதியாகப் புனரமைப்பு!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY