தரத்தில் உயர்த்தப்பட்ட சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை

தரத்தில் உயர்த்தப்பட்ட சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை

மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை " பீ" (“B”) தரம் கொண்ட பிரதேச வைத்திய சாலையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையை சகல வசதிகளுடனான ஆதார வைத்திசாலையாக அல்லது மாவட்ட வைத்தியசாலையாக(Base Hospital or District Hospital) தரம் உயர்த்துமாறு பிரேரித்திருந்தார்.

அதன் பயனாக மேற்படி பிரதேச வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு , பிரஸ்தாப தர உயர்வின் படி இல 01-18/2020 சுற்றறிக்கையின் பிரகாரம் அந்த வைத்தியசாலைக்கு மேலதிக வசதி வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

அதன்படி இந்த வைத்தியசாலை பின்வரும் வசதிகளுடன் B தரம் கொண்ட பிரதேச வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, தரமான வெளி நோயாளர் பகுதி, போதிய விடுதி வசதிகள், சிறு அறுவை சிகிச்சை கூறு, பிரசவ அறை, புனர்வாழ்வுப் பிரிவு, நோயாளர் தொடர் சிகிச்சைப் பிரிவு, அடிப்படை ஆய்வு கூட வசதிகள், எக்ஸ்-ரே கதிரியக்க வசதிகள், ஈ சி ஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதிகள், வருகை தரும் மருத்துவ நிபுணர்களின் சேவை, தரமான மருந்தகம், நவீன வசதிகள் உடன் கூடிய அம்புயூலன்ஸ் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.

பிரஸ்தாப வைத்தியசாலையை தரம் உயர்த்துமாறு முசலி, சிலாவத்துறை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததற்கு அமைவாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தா ர் என கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தரத்தில் உயர்த்தப்பட்ட சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More