
posted 5th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தயிரில் புழுக்கள் - சீல் வைக்கப்பட்ட பாற்சாலை
புழுக்களுடன் கூடிய தயிரை விற்பனை செய்த பாற்சாலையை சீல் வைத்து மூட உத்தரவிட்ட யாழ். நீதிவான் நீதிமன்றம் உரிய நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இயங்கும் பாற்சாலையே இவ்வாறு சட்ட நடவடிக்கைக்கு உள்ளானது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் பாற்சாலை ஒன்றில் விற்பனையாகும் பால் மற்றும் பால் பொருட்கள் தரமற்றவையாக உள்ளதுடன், அங்கு பெரும் சுகாதார சீர்கேடுகுளம் நிலவுவதாக மக்கள் உரிய சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
இதற்கமைய, சுகாதார பரிசோதகர்களான யோ. ரவீந்திரன், கே. சதீஸ்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் புதன் கிழமை 03ஆம் திகதியன்று குறித்த பாற்சாலையில் சோதனை நடத்தினர். இதன்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தயிரில் புழுக்கள் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
இதையடுத்து, குறித்த பாற்சாலைக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை 4ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கில் நிறுவனத்தின் முகாமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அந்த பாற்சாலை சுகாதார சீர்கேட்டை சரிசெய்யும்வரை சீல் வைத்து மூட உத்தரவிட்ட நீதிவான் லெனின்குமார், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)