தமிழ் சமூகத்திற்காக உரத்துக் குரல் கொடுத்தவர் ஐயா சம்பந்தன்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தமிழ் சமூகத்திற்காக உரத்துக் குரல் கொடுத்தவர் ஐயா சம்பந்தன்

“தமிழ் சமூகத்தின் நலனுக்காகவும், எம்மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுத்து வந்த சம்பந்தன் ஐயாவின் குரல் ஓய்ந்துள்ளமை பெரும் துயரைத்தருகின்றது”

இவ்வாறு, பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.அனுசரணையுடனான தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்ன மோகன் (ராஜி) மறைந்த முதுபெரும் தமிழ்த்தலைவர் இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் விடுத்துள் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன் (ராஜி) விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சமூகத்தின் மாபெரும் அரசியல் தூண் சரிந்துள்ளமை மிகவும் மனவேதனை அளிக்கின்றது.

தமிழர் சமூகத்தின் ஆளுமை மிக்க மிகப்பெரும் சக்தியாகத்திகழ்ந்த அவர் பல்வேறு தமிழ் மக்கள் சார்ந்த உள்ளுர் மற்றும் சர்வதேச பேச்சு வார்த்தைகளில் தமது அனுபவ முதிர்வின் வல்லமையை வெளிப்படுத்தி வந்தார்.

சாணக்கியம், வல்லமை மிக்க அவரது செய்றபாடுகளால் துணிந்து போராடி வந்த தமிழர் சமூகம் அவரது பிரிவால் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றது.
அவர் காட்டிய நேரிய வழிகளில் நம் சமூகம் முன்னோக்கி நகர திட சங்கற்பம் பூணவேண்டுமென நாம் வலியுறுத்தும் நிலையில்,

எமது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் அவரது பிரிவால் ஏற்பட்டுள்ள பெரும் துயரில் பங்கு கொள்கின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

தமிழ் சமூகத்திற்காக உரத்துக் குரல் கொடுத்தவர் ஐயா சம்பந்தன்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)