தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகளுக்கு அழைப்பு
தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகளுக்கு அழைப்பு

தமிழ்த் தேசிய மேதின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடார்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி கலந்துகொள்ளுமாறும் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய மேநாள் ஏற்பாட்டு பேரவையின் ஊடக சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 9 மணியளவில் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசிய மேதின ஏற்பாட்டு பேரவை உறுப்பினர்கள் ஊடக சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வு வடக்கு மகாணம் தளுவி எதிர்வரும் 1ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கரடிபோக்கு சந்தியில் பேரணியோடு ஆரம்பிக்கப்பட்டு, கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் நிறைவடைய உள்ளது. குறித்த பேரணியில் தமிழ்த் தேசியத்தின்பால் செயற்படுகின்ற அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மேதின நிகழ்வின் ஊடாக அரசுக்கம், சர்வதேசத்திற்கும் ஓர் செய்தியை சொல்ல வேண்டும்.

இந்த அரசு வேண்டாம் என்றே எமது மக்கள் வாக்களித்தனர். ஆனால் இன்று அதனை சிங்கள மக்கள் உணர்கின்றனர். இந்த நிலையில் எமது நாட்டில் வாழும் சிங்கள மக்களிற்காகவும், குறித்த தினத்தில் ஓர் செய்தியை அரசுக்க விடுக்க வேண்டும்.

இன்று சிங்கள மக்கள் பொருளாதாரத்தினால் மிகவும் நசுக்கப்படுகின்றார்கள். இந்த நிலை மாற்றப்பட்டு சிங்கள மக்களையும் பாதுகாக்கும் வகையில் எமது எழுச்சியானது சர்வதேசத்திற்கு நல்ல செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என ஏற்பாட்டு குழு சார்ப்பில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில், விவசாய அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், பிரஜைகள்குழு, வர்த்தக சங்கங்கள் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி குழுக்களும் தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்;

இந்த அரசாங்கம் விவசாயத்தின் மீது கைவைத்தது. அதனால், பாதிக்கப்பட்டு அல்லலுறுவது மக்களாகிய நாங்கள் தான்

எனவே, விவசாயிகள் அனைவரும் குறித்த பேரணியில் பங்கெடுத்து, எமது பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். அதற்காக அனைத்து விவசாய அமைப்புக்களும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகளுக்கு அழைப்பு

எஸ் தில்லைநாதன்

The best Healing System that clears Negativity, raises your Vibration, and manifests your Desires >>>>>>>>

தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகளுக்கு அழைப்பு
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More