தமிழரசு கட்சியின் நிலைப்பாடுபற்றி ஆயவுக்கூட்டத்தில் ஒரு அலசல்
தமிழரசு கட்சியின் நிலைப்பாடுபற்றி ஆயவுக்கூட்டத்தில் ஒரு அலசல்

நாட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் இருந்து வரும் நிலையிலும், மன்னாரில் நடைபெற இருக்கும் இக் கட்சியின் மாநாடு தொடர்பாக ஆராயும் முகமாக மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக் கூட்டம். இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை (30.12.2022) இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் அவரின் கட்சி அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட தழிரசுக் கட்சியின் செயலாளரும் நகர சபை உறுப்பினருமான யன்சன் பிகிராடோ, தமிழரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளரும் மன்னாரின் பிரபலயமான சட்டத்தரனி எஸ். டினேசன், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி. பரஞ்சோதி உட்பட இக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக் கட்சிக் கூட்டத்தில் இன்றையக் காலகட்டத்தில் கட்சி எதிர்கொள்ளும் சவால்கள், உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் சார்த்தியக்கூறுகள் ஏற்பட்டால் அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது போன்ற முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

அத்துடன் எதிர்வரும் மாதம் (ஜனவரி) 28ந் திகதி இக் கட்சியின் தலைவர், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளலுடன் மன்னாரில் இக் கட்சியின் மகாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் நிலைப்பாடுபற்றி ஆயவுக்கூட்டத்தில் ஒரு அலசல்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More