தமிழக பாஜக தலைவர் உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. மீனவர் சமூகம் குற்றச்சாட்டு.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என மீனவர் சமூகம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச சம்மேளன உப தலைவரும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது;

இந்தியாவிலிருந்து பாஜக தமிழ்நாடு தலைவர் கௌரவ அண்ணாமலை அவர்கள் வந்திருந்தார்கள். எமது நாட்டில் வந்து சகல இடங்களுக்கும் சென்று எல்லா இடங்களையும் பார்வையிட்டு கடைசியாக எங்களது தமிழ் அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசியிருந்தார்.

நாங்கள் அவரை ஒரு குறுகிய நேரத்தில் சந்திப்பு கேட்டு நாங்கள் யாழ்ப்பாணம் விடுதி ஒன்றில் வந்து பிற்பகல் 6:30 மணியளவில் சந்தித்திருந்தோம்.

எமது நாட்டு கடல் வளங்களை அழிக்கின்ற இழுவைமடி தொழில் சம்பந்தமாக அவருடன் பேசியிருந்தோம்.

அவர் முதல் மதியம் ஒரு பேட்டியில் குறிப்லிட்டிருந்தார். எமது நாட்டு மீனவர்கள் வந்து தற்செயலாகத்தான் எல்லை தாண்டி வருகிறார்கள். வேண்டு மென்று வருவதில்லை என்று.

இந்த விடயம் சம்மந்தமாக அவர் ஏங்களுடன் பேசவில்லை. ஆனால் நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளைத்தான் கதைத்திருந்தோம். இவ்வாறு எல்லை தாண்டும் மீனவர்களால் எமது வளம் முழுக்க அழித்து

50 கோடி ரூபா சொத்துக்கு கூடுதலான சொத்துக்களான கடற்றொழில் உபகரணங்களான வலை போன்ற அனைத்தையும் அழித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இதற்குரிய நட்ட ஈடு கோரியும் எமக்கு எந்தவிதமான இழப்பீடும் வரவில்லை.

இது விடயமாக தமிழ்நாடு அரசு டில்லி அரசு உட்பட அனைவருக்கும் கடிதம் மூலமாகவும் தொலைக்காட்சி ஊடாகவும் நாங்கள் அறிவித்திருந்தோம்.

இறுதியாக கச்சதீவில் சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்களின் கைகளிலும் கடிதங்களை ஒப்படைத்து அந்த கடிதங்கள் கௌரவ தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களி்க்கு ஒப்படைக்கப்பட்டும் எந்தவிதமான பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. இது எமக்கு வேதனை அளிக்கின்றது.

ஏனென்று சொன்னால் நாங்கள் கடிதங்களை அனுப்பினால் அது கிடைத்திருக்கிறது. அதனை பரிசீலனை செய்கின்றோம், என்றாவது ஒரு மறுமொழி வந்திருந்தாலாவது எங்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்கும்
நாங்கள் எந்த கடிதம் கொடுத்தாலும் இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை.

தமிழ் நாட்டிலிருந்து வந்து சென்ற திரு அண்ணாமலை அவர்கள் சொல்லியிருக்கின்றார்;

1974 ம் ஆண்டு கச்சதீவை தாரை வார்த்து கொடுத்டாகவும் 1974 ம் ஆண்டிறக்கு முன்பு இந்திய. மீனவர்கள் கச்சதீவில் தங்கி வலைகளை உலர்த்தி தொழில் செய்தது என்று கூறியிருக்கின்றார்.

இந்தியாவில் சொல்லியிருக்கின்றார் இந்திய மீனவர்கள் கச்சதீவில் மீன் பிடித்திருக்கிறார்கள் என்று.

அது உண்மை. 1974 ம் ஆண்டிற்க்கு முன்னர் இழுவை மடி தொழில் அங்கு இல்லை. பாரம்பரியமான நாட்டு படகிலிருந்து பாரமாபரியமான தொழிலை செய்தார்கள் அவர்கள் நெடுந்தீவு கடல் என்று இல்லை.

எங்கள் பருத்தித்துறை கடலிலும் தொழில் செய்தார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. நாங்கள் சகோதரம் என்ற முறையில்தான் தொழில் செய்தோம்.

நாங்களும் இந்திய கரையில் தொழில் செய்தோம். அவர்களும் இங்கே வந்து தொழில் செய்தார்கள். அது பாரம்பரியமான தொழில். எந்தவிதமான தடை செய்யப்பட்ட தொழிலும் இல்லை.

தற்போது இந்திய இழுவை மடி தொழிலை உருவாக்கி 2000 க்கு மேற்பட்ட படகுகளை வைத்துக்கொண்டு அத்துமீறி இன்று இந்தியாவில் 25000 க்கு மேற்பட்ட நாட்டு படகு உள்ளது.

அதற்கு கீழாக சிறுதொழிலாளர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்

பணம் படைத்த அரசியல் வாதிகள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் இந்த தொழிலை வைத்துக் கொண்டு அடி மட்டமாக என்னவென்று சொன்னால் இந்தியாவில் இருக்கின்ற பாரமாபரிய மீன்பிடி தொழிலாளர்களின் தொழில்களை அடக்கி தாங்கள் அடக்குமுறையை பயன்படுத்தி சர்வாதிகார முறையில் இந்த தொழிலை செய்கிறார்கள்.

இது சம்மந்தமாக திரு அணணாலை அவர்களுடன் பேசியபோது இது விஷயமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடனும், தமிழ்நாடு மீன்வாரியத்துறை அமைச்சருடன் கதைத்தும் உரிய தீர்வொன்றை நாங்கள் பெறுவோம். கட்டாயமாக நாங்கள் இதனை செய்கிறோம் என்று எங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தவர். ஆனால் இந்தியா சென்றபின் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி எங்களுடைய கடற்றொழிலாளர் விடயமாக அவர் ஏதுவுமே பேசவில்லை. இது உண்மையில் எங்களுக்கு ஒரு வேதனை அளிக்கின்ற ஒரு விஷயமாகும்.

உண்மயின்படி, அவர் இங்கே வந்து எங்களுடைய பாரம்பரியம், கலை கலாசாரம் கோயில்கள் பற்றி கதைத்துள்ளார். அது உண்மையில் வரவேற்க வேண்டிய விடயம்.

இந்தியா என்னென்ன செய்திருக்கின்றது என்றெல்லாம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியா செய்கிறது ஏனென்று சொன்னால் தொப்புள்கொடி உறவென்று சொன்னால் செய்யத்தான் வெஎண்டும்.

ஆனால் இப்போது தொப்புள் கொடி உறவையும் தாண்டி சிங்கள மக்களுக்குத்தான் முற்றாக உதவி செய்து கொண்டிருக்கின்றார்.

யுத்தம் முடிந்து 10 வருடமாக 50 கோடி சொத்துக்கு மேலே எங்களுடைய கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. உயிர்கள் போயிருக்கிறது. உடமைகள் அழிக்கப்பட்டிருக்கிறது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாங்கள் இங்கு வந்திருந்தும் அவர்கள் எங்களை ஏன் என்று கேட்கவில்லை.

இன்று தென்னிலங்கையில் போராட்டம் நடக்கிறது.

பட்டிணிச் சாவை மக்கள் எதிர்நோக்குகிறார்கள்.

உலருணவு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கின்றன.

மண்ணெண்ணெய் இல்லை என்றவுடன் அந்த மக்களுக்கு உதவ இந்திய அரசாங்கம் முன்வந்திருக்கிறது. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

அதற்கு எங்களுக்கு மனவருத்தம் இல்லை. ஆனால் எங்களுக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.

உங்கள் நாட்டு இழுவை மடி படகு எமது நாட்டு ஏல்லைக்குள் வரக்கூடாது என்றார்.

தமிழக பாஜக தலைவர் உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. மீனவர் சமூகம் குற்றச்சாட்டு.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY