
posted 30th May 2022
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பொது மக்களுக்கான தபால் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பெரும் கவலையும், புகாரும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் இன்றைய நிலமை தொடர்பிலும், எரிபொருளுக்கான விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் விடுத்துள்ள பணிப்பின் காரணமாகவே இவ்வாறு தபால் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
இதன்படி கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தினமும் மட்டக்களப்பு பிரதம தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு தபால் பொதிகள் வந்தடைகின்ற போதிலும், வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே, (செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்) திணைக்கள வான் மூலம் இத்தபால் பொதிகள் தபாலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து தெற்கே பாணமை வரையும், மற்றும் கதிரவெளி வரையும் இரு திணைக்கள வான்கள் மூலம் வழமையாகத் தினமும் தபால் பொதிகள் கொண்டு செல்லப்பட்டு தபாலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு, தினமும் பொது மக்களுக்கு தபால் விநியோகமும் இடம்பெற்றுவந்தது.
ஆனால் தற்சமயம் குறித்த தபால் பொதிகளை விநியோகிக்கும் திணைக்கள வாகனத்தின் சேவை வாரத்தில் மூன்று தினங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு தினமும் நடைபெற்றுவந்த (விடுமுறை தினங்கள் தவிரந்த) தபால் விநியோகமும் தபாலகங்கள் மூலம் வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையால் பல முக்கிய தபால்கள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளுக்கான அழைப்புக் கடிதங்கள் கூட தாமதமாகியே கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாகப் பொது அமைப்புக்கள் பல சுட்டிக்காட்டியுள்ளன.
இது விடயமாக முக்கிய தொழிற்சங்கமான அஞ்சல் உத்தியொகத்தர் சங்கத் தலைவர் யூ.எல்.எம். பைஸர் அவர்களிடம் பொது மக்கள் உட்பட பொது அமைப்புக்கள் பலவும் சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டுள்ளதுடன்,
மக்களுக்கு அத்தியாவசியமான தபால் விநியோகம் தினமும் நடைபெற, உரிய மேலதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஆவன செய்யுமாறும் கோரியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY