டி.ஏ. ராஜபக்‌ஷவின் உருவச்சிலை நொருக்கப்பட்டது

அம்பாந்தோட்டை - தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்‌ஷவின் உருவச்சிலை அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களால் இன்று செவ்வாய்க்கிழமை கட்டி இழுத்து வீழ்த்தி உடைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்‌ஷ, பஸில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சகோதரர்களின் தந்தையே டி.ஏ. ராஜபக்‌ஷ.

அரசுக்கு எதிரான போராட்டக்காரார்களால் ராஜபக்‌ஷக்களின் பூர்வீக இல்லம் நேற்று முன்தினம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. டி.ஏ. ராஜபக்‌ஷவின் சமாதியும் நேற்று முன்தினம் தரைமட்டமாக்கப்பட்டது. இந்நிலையிலேயே நேற்று உருவச்சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்‌ஷவின் உருவச்சிலை நொருக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)