ஜிபிஎஸ் மூலம் அளவிடப்படும் கரைவலைப்பாடுகளும், துறைகளும்

நாடு முழுவதிலுமுள்ள கரைவலைப் பாடுகள் மற்றும் துறைகளை முறையாக ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு 1996ஆம் ஆண்டில் 02 ஆம் இலக்கமுடைய கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் ஒழுங்கு விதிகளின் கீழ் பிரிசுரிக்கப்பட்ட 337- 48ஆம் இலக்க 1985.02.21 ஆந் திகிதியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமானியின் பிரகாரம் 1984இல் கரைவலை மீன்பிடி ஒழுங்கு விதிகள் திருத்தப்பட்டு புதிய ஒழுங்குவிதிக் கோவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடு முழுவதிலும் செயற்படுத்தப்படும் சகல கரைவலைப்பாடுகள் மற்றும் துறைகள் ஜிபிஎஸ் தொகுதி மூலம் எல்லை நிர்ணயிக்கப்பட்டு கரைவலை ஒழுங்கு விதிகள் திருத்தும் போது அதில் உள்ளடக்கப்படல் வேண்டும் எனவும், இந்த அளவீட்டு நடவடிக்கை நில அளவைத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதால் இந்த விடயத்துக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரைவலை துறைகளின் அளவீட்டு நடவடிக்கைக்கு நில அளவைத் திணைக்களத்துக்கு ஏற்படும் செலவினம் அகில இலங்கை கரைவலை உரிமையாளர்களின் மீனவ கூட்டுறவுச் சங்கத்தினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடமிருந்து அறவிடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த அளவீட்டு நடவடிக்கைக்கான செலவினம் சம்பந்தப்பட்ட கரைவலைப்பாட்டின் உரிமையாளர்களினால் செலவிடப்படல் வேண்டும் என்றும், இது சம்பந்தமாக ரூபா 27 ஆயிரம் உதவித் தொகையின் கீழ் ஒரு கரைவலை பாட்டின் அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு கரைவலை பாடுகள் அமைந்துள்ள பிரதேசத்தின் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளரினால் அளவீட்டுக்கான விண்ணப்பம் நில அளவைத் திணைக்களத்துக்கு அனுப்புதல் வேண்டும்.

அத்துடன் தேவையான செலவினம் கரைவலை பாட்டின் உரிமையாளரினால் இத் திணைக்களத்துக்கு செலுத்தி அளவீட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

இந்த அளவீட்டு நடவடிக்கையை விசேட விடயமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதால் இந்த அளவீட்டு விண்ணப்பங்களை நில அளவீட்டு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பத்தின் உள்ளடக்கப்படும் கரைவலைப்பாடு மற்றும் துறைகளின் அளவீட்டு விண்ணப்பத்தின் பிரதி ஒன்று கடற்தொழில் பணிப்பாளர் நாயகம் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் பிரதேச செயலாளர் இவர்களுக்கும் அனுப்பி வைப்பதுடன் காணி மற்றும் காலணி அபிவிருத்தி அமைச்சினால் இணக்கம் தெரிவிக்கப்பட்ட கடிதத்தின் பிரதியும் இணைக்கப்பட வேண்டும் என பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே. கஹவத்த தெரிவித்துள்ளார்.

ஜிபிஎஸ் மூலம் அளவிடப்படும் கரைவலைப்பாடுகளும், துறைகளும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More