
posted 8th May 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
எனினும், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி கூடி தீர்மானம் எடுக்கும் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பான விளக்கம் தமக்கு வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY