சொகுசு பஸ் -  ரயில் மோதல் - ஒருவர் மரணம்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முயன்ற சொகுசு பஸ்ஸை ரயில் மோதித் தள்ளியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

அரியாலை - ஏ. வி. வீதியில் இன்று வியாழன்(01) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நாயன்மார்கட்டை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது -31) என்பவரே உயிரிழந்தார்.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதுண்டே இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்தப் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியதுடன், இதனை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சொகுசு பஸ் -  ரயில் மோதல் - ஒருவர் மரணம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More