
posted 11th November 2022
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் உதவி பிரதேச செயலாளர் யூ.எல். அஸ்லம், நிருவாக உத்தியோகத்தர் கே.பி. சலீம் ஆகியோர் உட்பட இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர்கள், மற்றும் கலாச்சார பிரிவு உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸன், அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு சீருடைகளை வழங்கிவைத்து உரையாற்றுகையில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவைகளை வெகுவாகப் பாராட்டினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)