
posted 11th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சாய்ந்தமருது காரியப்பரில் மாணவர்களுக்கு கௌரவம்
சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் 2024 மாகாண மட்ட புலமைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகள் அந்தப் பாடசாலையின் அதிபர் எம். எஸ். எம். ஆரிபினால் பரிசுப்பொருட்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், 150 புள்ளிகளுக்கு மேல், 100இற்கு மேல் 75இற்கு மேல் என புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு கௌரவமும் மற்றும் வகுப்புகளில் மே மாதத்தில் அதிக வரவுகளைத் தந்த மாணவ, மாணவிகளைக் கௌரவித்து பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)