சாணக்கியன் சந்திப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சாணக்கியன் சந்திப்பு

ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த அமரர் இரா. சம்பந்தன் ஐயாவின் இறுதிக் கிரிகைகளின் போது கலந்துகொண்ட இந்திய (India) பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வருகை தந்திருந்தார்கள் அதன்போது அவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களும் கலந்து கலந்து கொண்டிருந்தனர்.

இச் சந்திப்பானது திருகோணமலையில் (Trincomalee) உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழகத்துக்குமான உறவினை பலப்படுத்தும் வகையில் எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அதன் தேவை பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துரைத்தார்

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நிலத் தொடர்பு ஏற்படுத்தப்படுவதாக இருந்தால் அதன் மூலம் கூடுதலாக பயனடைய போவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தான். அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்தியாவினுடைய முதலீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்றார்கள் என்பது பற்றியும் அதிலும் இந்தியாவின் முதலீடுகள் வடக்கு கிழக்கிலே செய்யும் பொழுது இங்கு வட கிழக்குக்கும் இந்தியாவுக்குமான அரசியல் இஸ்திரத்தன்மையினை பேணமுடியும் என்பது தொடர்பான விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழராக இருக்கும் காரணத்தினால் இங்கு கொண்டு வருவதுடன் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலகுவானதாக காணப்படும். இருப்பினும் இனி வரும் காலங்களில் எமது முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத்தினை போன்ற ஆளுநர் நியமிக்கப்படின் நிலத் தொடர்பு ஏற்ப்படுத்தப் பட்டிருப்பினும் கூட இவ்வாறான முதலீடுகள் எமது மாவட்டங்களுக்கு வருவதற்குரிய வாய்ப்புக்களில் சில தடங்கல்கள் சிக்கல்கள் காணப்படக்கூடும். அத்துடன் மாகாண சபை முறைகளுடாக மாகாண சபைத் தேர்தல் நடந்தால் அதிலும் தமிழ் பேசும் மக்கள் தமிழரசு கட்சியினுடைய தலைமையின் கீழ் மாகாணங்கள் இயங்குமாக இருந்தால் கூடுதலாக முதலீடுகள் உள்வாங்கி தற்போது மத்திய அரசுடன் செயல்படுவதை விட எமது மாவட்டங்களுக்கான செயல் திட்டங்களை மாகாண மட்டத்தில் செய்யக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். இவற்றினை செய்வதற்கு இந்தியாவின் கரிசனை எம் மக்கள் மீது வேண்டும் என்பதனை பற்றி நாம் வலியுறுத்திதினோம். தேர்தல்கள் நடைபெறும் காலகட்டம் என்பதனால் இந்தியா இதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் அத்துடன் இந்திய (India) பாரதிய ஜனதாவினது ஆதரவு மக்களுக்கு தேவை என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

சாணக்கியன் சந்திப்பு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More