
posted 17th May 2022
திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளமை சரியான முடிவுதானா என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் (உலமா கட்சி) தலைவர் முபாறக் அப்துல் மஜீட் கேள்வி எழுப்பியுள்ளார். இது விடயமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
20க்கு ஹரீஸ் எம் பி கை உயர்த்தியதன் மூலம் சஜித் கூட்டிலிருந்தும் முஸ்லிம் காங்கிரசிலிருந்தும் வெளியேறியிருந்தார்.
மு. காவிலிருந்து அவர் வெளியேறியதாக அவர் ஏற்காத போதும் வெளியேறினார் என்பதே நிதர்சணம்.
ஹரீஸ் 20க்கு ஆதரித்தது பதவிக்கு ஆசைப்பட்டல்ல என்பதை நாம் அறிவோம். கடந்த ஆட்சியில் முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுனர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என இனவாதி ரதன தேரர் உண்ணாவிரதம் இருந்த போது அனைவரும் ராஜினாமா செய்து பின் அமைச்சர்கள் மீண்டும் பதவி பெற்ற போது ஹரீஸ் மட்டும் அமைச்சு பதவியை நிராகரித்தார்.
ஹரீஸ் 20க்கு கை உயர்த்தியமைக்கான ஒரே காரணம் கல்முனை பிரச்சினையாகும். இதனால் ஐக்கிய காங்கிரஸ் கட்சியினராகிய நாம் அவரை வாழ்த்தியிருந்தோம்.
கல்முனை முஸ்லிம்களில் 90 வீதமானோர் ஹரீசின் இந்த செயலை உள்ளுக்குள் பாராட்டினர் என்பதே உண்மை.
பின்னர் பொதுஜன அரசின் மோசமான ஆட்சி காரணமாக 20ஐ ஆதரித்தோரும் செய்வதறியாது முழித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திய ரவூப் ஹக்கீம் ஹரீசுக் கெதிராக கிழக்கில் அணி சேர்த்தார்.
தற்போது பொதுஜனமுன பெரமுன அரசு ஒழிந்து ரணில் அரசு ஏற்பட்டுள்ள நிலையில் ரவூப் ஹக்கீம் எந்தப்பக்கம் இருக்கிறாரோ அதே சஜித் பக்கம் ஹரீஸ் சென்றது மிகச்சரியான தீர்மானமாகும்.
ஆனாலும் ரணில் ஆட்சியில் கல்முனை பிரச்சினை தீருமா அல்லது இன்னும் கொதிப்படையுமா என்பதெல்லாம் அடுத்து வரும் சோடாப் போத்தல் அரசியலாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY