
posted 11th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சம்மாந்துறை குவாசி நீதிமன்றத்தின் செயற்பாடு மீண்டும் முன்னெடுப்பு
அண்மைக்காலமாக இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை குவாசி நீதிமன்ற செயற்பாடு மீண்டும் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
சம்மாந்துறை குவாசி நீதிமன்ற செயற்பாடு நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் பதில் குவாஷி நீதிபதியாக கடமையாற்ற நியமிக்கப்பட்ட அஹமட் லெவ்வை ஆதம்பாவா தலைமையில் உத்தியோகபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம், சம்மாந்துறை பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் றினோசா , மனித எழுச்சி நிறுவன பணிப்பாளர் கே. நிஹால் அகமட், சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். முஸ்பிறா, மனித எழுச்சி நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஜெனிற்றா , சம்மாந்துறை உலமா சபை செயலாளர் , சம்மாந்துறை முன்னாள் குவாசி நீதிபதி எஸ்.எல். அப்துல் சலாம், சம்மாந்துறை குவாசி நீதிமன்ற செயலாளர் வஹாப், மற்றும் மனித எழுச்சி நிறுவன தொண்டர்களான பாத்திமா முர்ஷிதா மற்றும் மிஸ்ரியா மற்றும் சாய்ந்தமருது குவாசி நீதிமன்ற உத்தியோகத்தர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். முஸ்பிறா, உளவளத் துணை உத்தியோகத்தர் எம்.சி. பௌமிலாவும் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)