
posted 17th January 2022
தற்பொழுது பரவலாக நிலவிவரும் சமூக மோதல்கள் தொடர்ந்து ஏற்படாவண்ணம் இது தொடர்பாக இலங்கை சமாதான பேரவை மற்றும் மன்னார் பிரதேச சர்வ மதக் குழுக்கள் ஆகியவற்றின் அனுசரனையுடன் மன்னாரில் 'சமூக மோதலுக்கான முன் எச்சரிக்கை மற்றும் தயார் நிலை' பற்றிய ஒரு நாள் பயிற்சி கருத்தமர்வு இடம்பெற்றது.
கடந்த வியாழக்கிழமை (13.01.2022) இடம்பெற்ற இவ் பயிற்சி அமர்வில் சர்வ மதத் தலைவர்கள், கிராம அலுவலர்கள், சிவில் அமைப்பினர். பொலிஸ் பிரிவினர், அரசு சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என 29 நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதன் வளவாளராக இலங்கை சமாதான பேரவையின் நிர்வாக ஆலோகசரும் பயிற்சியாளருமான ஜே.பெனடிற், தேசிய சமாதான பேரவை திட்ட அலுவலர் அ.மெடோசன் பெரேரா, மன்னார் பிரதேச சர்வ மதக் குழுக்கள் திட்ட இணைப்பாளர் ஏ.ஜோன்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் பயிற்சி வகுப்பில் குறிப்பாக சகவாழ்வுக்கான முறைமை வெளிநாடுகளில் காணப்படுகின்றபோதும் நமது இலங்கை நாட்டில் இது எவ்வாறு அமைந்துள்ளது எனவும்,
சர்வ மதக் குழுக்களில் இருப்பவர்கள் நிச்சயம் ஒரு சார்பாக செயல்படக் கூடாது எனவும்,
இரு பகுதினர் மட்டில் ஏற்படும் பிரச்சனையானது தீர்க்கப்படாது இருக்குமாகில் அது காலபோக்கில் வன் செயலாக மாறும் எனவும் ஆகவே இவற்றை தடுத்து நிறுத்த முன் ஆய்த்தமாக செயல்பட வேண்டும் என்றும்,
எந்த விடயமாக இருந்தாலும் சரியான முறையில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். அன்றேல் அது பல பிரச்சனைகளுக்கு வழி சமைத்துவிடும் என்ற இவ்வாறு பல கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டு தெளிவு படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House