சமநிலையில் முடிவடைந்த போட்டி

வடக்கு நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணிகள் மோதும் பெருந்துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

11ஆவது தடவையாக வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டி இரு நாட்கள் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் 50.2 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதில், தஜீபன் 41 (48 பந்துகளில்) பாவலன் 27 (125 பந்துகளில்) ஓட்டங்களைப் பெற்றனர்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பந்து வீச்சில் தமிழ்ப்பிரியன் 4 விக்கெட்களையும் ஹரிசாந் 3 விக்கெட்களையும் பெற்றனர்.

பதிலுக்கு தனது முதல் இனிங்ஸில் ஆடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி முதல் நாள் ஆட்டம் முடியும் வரை, 32 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இரண்டாம் நாளான நேற்று முன்தினம் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 52.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இந்துக் கல்லூரி அணி சார்பில் பகலவன் 38 ஓட்டங்களையும் கிருசாந்தன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் பந்து வீச்சில் அபிராஜ் மற்றும் பிரதாப் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இரண்டாவது இனிங்ஸில், ஆடிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் 26.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதனால், 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 36 ஓவர்கள் நிறைவில் 108 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்ட நேரம் முடிவடைந்தது.

இதனால், இந்தப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

சமநிலையில் முடிவடைந்த போட்டி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள்

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More