சமத்துவத்தை நிலைநாட்ட ஒன்றிணைவோம் - அமைப்புக்கள் அழைப்பு

சமத்துவத்தை நிலைநாட்ட ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் நீர்கொழும்பு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் , மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழு , வடமாகாண பெண்கள் குரல் அமைப்பு , வடமாகாண பெண்கள் சம்மேளனம் ,வடமாகாண மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாணம் கடற்தொழிலாளர் இணையம் ஆகியன ஒன்றிணைந்து விடுத்திருக்கும் வேண்டுகோளில்;

உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, தனவந்தர், படித்தவ,ர் படிக்காதவர், அதிகாரம் கொண்டவர், அதிகாரமற்றவர் என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்படுகின்ற அபகரிப்பு அடக்கு முறைகள் போன்றவற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும், அடிப்படை உழைப்பாளிகள்,

துயர் பகிர்வோம்

நடுத்தர உழைப்பாளிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்ற அதிகாரிகள் அவர்களையும் அடக்கி ஆழுகின்ற அரசியல்வாதிகள் மற்றும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் போன்ற வர்க்கத்தினரிடமிருந்து விடுபட்டு சமத்துவத்தை நிலைநாட்டவும் தெற்காசிய ரீதியாக நடாத்தப்படுகின்ற இச்செயற்பாட்டோடு ஒன்றினைந்து செயற்பட இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • அத்துடன் இவ் அமைப்புக்கள் மன்னார் மாவட்டத்தில் இல்மனைட் உள்ளிட்ட கனியமணல் அகழ்வுக்கு எதிராக
  • தடைசெய்யப்பட்ட மீனவ உபகரண பாவனைக்கு எதிராக
  • கடல் அட்டைப் பண்ணைக்கு எதிராக
  • மக்களின் காணிகளை பாதுகாப்பு பெயரில் அபகரிப்புக்கு எதிராக
  • நாட்டில் எற்பட்டுள்ள பணவீக்கத்திற்கு எதிராக
  • அடிப்படை பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக
  • அரசியல் கைதிகளை பலவந்தமாக கைது செய்து வைத்திருப்தற்கு எதிராக
  • போதைப்பொருள் அதிகரிப்புக்கு எதிராக
  • இந்திய மீனவர்களின் வருகைக்கு எதிராக
  • இயற்கை வளங்களை அபகரிப்பதற்கு எதிராக
  • எரிபொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக
  • சோதனைச்சாவடிகளில் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு எதிராக
  • காற்றாலை மின்சார கருத்திட்டங்களுக்கு எதிராக

குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

சமத்துவத்தை நிலைநாட்ட ஒன்றிணைவோம் - அமைப்புக்கள் அழைப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More