சட்டவிரோதமாக கடல் வழியாக புலம்பெயர முற்பட்ட 26  பேர் இன்று அதிகாலை கைது

சட்டவிரோதமாக. இலங்கையிலிருந்து புலம்பெயர முற்பட்ட 26 பேர் இன்று அதிகாலை வெள்ளிக் கிழமை (16) கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை வேளை ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்துக்கு இடமான பல நாள் படகு செல்வதை அவதானித்துள்ளதுடன் அதனை சோதனையிட்டபோதே இவ்வாறு சட்டவிரோதமாக புலம் பெயர்ந்து செல்ல முற்பட்ட சந்தேகத்தில் குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்க்கு உட்பட்ட 04 பெண்களும், அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 26 பேரும், கைப்பற்றப்பட்ட படகும் தற்போது கடற்படை முகாமொன்றில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் உரிய சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள், உடுத்துறை, பூநகரி, குடத்தனை, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இதேவேளை மனித கடத்தல் காரர்கள் பாதுகாப்பற்ற முறைகளை பயன்படுத்தி வேகமாக பணம் சம்பாதிக்கும் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அபாயகரமான கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கடற்படை அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக கடல் வழியாக புலம்பெயர முற்பட்ட 26  பேர் இன்று அதிகாலை கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More