சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் போராட்டம்

பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யாதே! உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை தாங்கியவாறு அமைதி வழியில் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுத்தனர்.

பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்தபோது அங்கு வருகை தந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்டவேளை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிச் சென்ற சரத் வீரசேகர கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தமிழ் நீதிபதிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியில் தமிழ் நீதிபதிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு

முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு இணைந்து வடக்கின் ஏனைய மாவட்டங்கள், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டத்தரணிகள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்,

  • பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யாதே!
  • நீதித்துறை சுதந்திரம் ஓங்குக!
  • கௌரவ நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே!
  • நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே!
  • தலையிடாதே! தலையிடாதே! நீதித்துறையின் சுதந்திரத்தில்!
  • நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?
  • சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட!

போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இதன்போது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 வரையிலான சட்டத்தரணிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு

மன்னாரில்

மன்னார் சட்டத்தரணிகளும் இன்று (11) செவ்வாய்க்கிழமை பணிப் பகிஷ்கரிக்கை முன்னெடுத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அவரது கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்தே மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

காலை மன்னார் நீதிமன்றத்துக்கு சமூகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததோடு,முல்லைத்தீவில் இடம்பெறும் போராட்டத்திலும் கலந்துகொள்ள முல்லைத்தீவிற்குச் சென்றனர்.

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு

யாழ்ப்ப்பாணத்தில்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் இன்று (11) செவ்வாய் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்கத் தீர்மானித்ததாக யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா. தவபாலன் தெரிவித்தார்.






சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷின் கோரிக்கை

இன்றையதினம் செவ்வாய்சகோதர மொழி சட்டத்தரணிகளிடம், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாங்கள் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எதிராக போராடவோம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம். முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் கடந்த வாரம் இலங்கையினுடைய பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தமிழ் நீதிபதி தன்னை காணியில் இருந்து வெளியேற்ற முடியாது என்று இனவாதத்தை கக்குகின்ற வகையிலும் நீதித்துறையை அவமதிக்கின்ற வகையிலும், அச்சுறுத்துகின்ற வகையிலும் உரை ஒன்றை ஆற்றியிருந்தார்.

அவர் அதிலே உபயோகித்த தமிழ் நீதிபதி என்ற வாசகம் அதே பயங்கரமானது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக இன்றையதினம் முல்லைத்தீவிலே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம்.

இந்த இடத்தில் நாங்கள் சகோதர சட்டத்தரணிகள் சங்கங்களுக்கும், சகோதர சட்டத்தரணிகளுக்கும் விடுக்கின்ற தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், இந்த இடத்தில் நீங்கள் சுதாகரித்து சரத் வீரசேகரவுக்கு எதிராக குரல் கொடுக்காது இருந்தால் நாளைக்கு இதே சரத் வீரசேகர உங்களுக்கும் எதிராக திரும்பலாம்.

இன்று தமிழ் நீதிபதி என்று விழித்த சரத் வீரசேகர, சிங்கள நீதிபதி என்றோ, முஸ்லீம் நீதிபதி என்றோ அல்லது கரையோர சிங்கள நீதிபதி என்றோ கூட அச்சுறுத்துவார். ஆகவே சரத் வீரசேகரவின் கருத்துக்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்றுமாறு நாங்கள் கோரி நிற்கின்றோம் என்றார்.

சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)