கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று (08)  தோண்டி எடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

மணியந்தோட்டத்தில் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி காலை ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ். பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.

அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தப் பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கணவன், மனைவி மற்றும் அவர்களது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருந்தனர் எனக் கூறப்படுகின்றது.

அதன் பின்னர் பெண்ணின் சடலத்தை அவர்கள் வீட்டு வளாகத்தில் பெண்ணின் மோட்டார் சைக்கிளுடன் புதைத்தனர் எனக் கூறப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை குறித்த பகுதியில் தோண்டும் பணி இடம்பெற்றது. இதன்போது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் எடுக்கப்பட்டது.

குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபா பணம் வாங்க சென்றபோதே காணாமல் போயிருந்தார் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று (08)  தோண்டி எடுக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More