கொக்கட்டிச்சோலை "குறவஞ்சி" நூல் வெளியீடு!

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய "கொக்கட்டிச்சோலை குறவஞ்சி" நூல் வெளியீடு மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தியின் தலைமையிலும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மா. செல்வராஜா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் ஆகியோரின் முன்னிலையிலும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடியும், கௌரவ அதிதிகளாக கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தலைவர் இ. மேகராசா, செயலாளர் சி. கங்காதரன் மற்றும் பொருளாளர் ச. கோகுலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இங்கு வெளியிடப்படவுள்ள நூலின் முதல் பிரதியினை சிரேஷ்ட சட்டத்தரணி க. நாராயணபிள்ளை பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இந்நூலுக்கான வெளியீட்டுரையை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நடன, நாடக அரங்கியல் துறை தலைவர் திருமதி தாக்ஷாயினி பரமதேவனும், நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க. மோகனதாஸனும் நிகழ்த்துவர்.

கொக்கட்டிச்சோலை "குறவஞ்சி" நூல் வெளியீடு!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More