
posted 2nd May 2022
சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்த முதலாவது குருவானவரும், திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டங்களிலும் மற்றும் வெளிநாடுகளில் திருச்சபைத் தொண்டாற்றியவருமான அருட்திரு அருளானந்தம் அடிகளாரது 50 ஆவது குருத்துவ பொன்விழா திருப்பலி சனிக்கிழமை (30) காலை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
முதலில் பங்கு மக்களால் ஆலய முன்றலில் இருந்து அழைத்துவரப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத் திருப்பலியில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம், ஆலய பங்குத் தந்தை அருட்திரு பாலதாஸ் பிறையன், பங்கு மைந்தர்களான அருட்திரு அமலதாஸ், அருட்திரு நரேஸ் மற்றும் அருட்திரு தேவசகாயம் அடிகளார் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தன.ர் இதனை தொடர்ந்து பங்குமக்களால் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY