
posted 5th December 2022
சுத்தமான குடிநீரை நிறைவாக வழங்கும் திட்டத்தின் மூலம் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஐஎஸ்ஆர்சி தனியார் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மடுக்கரைப் பகுதியில் சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தை காதர் மஸ்தான் அவர்கள் ஞாயிறிறுக் கிழமை (04) திறந்து ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஐஎஸ்ஆர்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் மொஹமட் சயாப் இந் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முஸ்லிம் ஹேன்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜனாப் மிஹ்லார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)