
posted 24th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கிளிநொச்சி வளாகம் பல்கலைக்கழமாக உயரலாம் - அமைச்சர் டக்ளஸ்
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் எதிர்காலத்தில் கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றம்பெறும் வாய்ப்புகள் வரலாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகர் பொறியியல் துறையின் 10ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், யாழ். பல்கலைகழகத்திற்கு ஒரு பொறியியல் துறை தேவையென பேராசிரியர் துரைராஜாவின் 33 வருட கனவு நிறைவு பெற்று இன்று பத்து வருடங்கள் கடந்துவிட்டன்.
அதுமட்டுமல்லாது குறித்த வளாகம் பல ஆயிரம் மாணவர்களை பிரசவித்துவிட்டது. மேலும், இன்று யாழ். பல்கலையின் வளாகமாக உள்ள கிளிநொச்சி பொறியியல்பீடம் அதனுடன் இணைந்து தொழில்நுட்ப பீடம், விவசாய பீடம் எதிர்காலத்தில் கிளிநொச்சியில் பல்கலைக்கழகம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று எதிர்வு கூறுகின்றார் டக்ளஸ்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)