posted 18th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று(17) செவ்வாய்க்கிழமை பி.ப 2.00மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட கலாசார பேரவையின் தலைவருமான றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
நடப்பாண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா எதிர்வரும் 27ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிலையில், குறித்த கலந்துரையாடலில் நடப்பாண்டுக்கான மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக, விழா அரங்கத்திற்கான பெயர், விழாவுக்கான விருந்துனர்கள், விழாவுக்கான குழுக்கள் மற்றும் குழுக்களுக்கான பொறுப்புக்கள், நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைப்பு, நிதித் தேவைகள், விழா முன்னேற்பாடுகள், கலைஞர் கௌரவிப்பு ஏற்பாடுகள், கலைநிகழ்வுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி), மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர், வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக கலாசார பிரிவின் உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கலாசார பேரவையின் அங்கத்தவர்கள், கலைஞர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)