
posted 6th May 2022
இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அறிவிக்கப்பட்டபோதும் கிளிநொச்சியில் ஓரளவு சாதாரண நிலையை அவதானிக்க முடிகிறது
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள், கிளிநொச்சி சேவைச் சந்தை மற்றும் தபால் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று திறக்கப்பட்டுள்ளதுடன் அரச, தனியார் பேருந்து சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமையை அவதானிக்க முடிகிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)