கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் உட்பட. 46 பேருக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் உட்பட. 46 பேருக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. நேற்று மட்டும் கிளிநொச்சி பாடசாலை மாணவர்கள் 10 பேருடன் மொத்தம் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கராயன்குளம், புதுமுறிப்பு, விவேகானந்தா நகர், ஆனந்த நகர், செல்வபுரம், பொன்நகர், வட்டக்கச்சி மற்றும் முழங்காவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோய்யியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 17.11.2021 மட்டும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பளை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே வீதிகளில் நடமாடுவோர், பொது இடங்களுக்கு செல்வோர்கள், பேருந்துகளில் பயணிப்பவர்கள் மற்றும் பொது சந்தைகளுக்கு செல்பவர்கள் முகக்கவசங்கள் அணிந்து சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் உட்பட. 46 பேருக்கு கொரோனா தொற்று!

எஸ் தில்லைநாதன்

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More