
posted 11th May 2022
இலங்கையில் கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் காரியாலயத்திற்கு முன்பாக அதன் ஊழியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
அமைதியான முறையில் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேட்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான பதாதைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டமானது முன்மெடுக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)