காலநிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரித்தானியாவிடமிருந்து ஒத்துழைப்பு

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில் நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானிய விருப்பம் தெரிவித்துள்ளது

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்காக இலங்கை எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதுடன், அதற்கு அவசியமான தொழில் நுட்ப மற்றும் செய்முறை ரீதியான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கும் என பிரித்தானியா பிரதி உயர் ஸ்தானிகர் விசா வென்ஸ்டால் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவிற்கும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் புதன்கிழமை (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இலங்கையில் நிர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகளுக்கு ஆதரவை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் ஏற்கனவே பசுமை ஹைட்ரசன் வலுச்சக்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இக் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரித்தானியாவிடமிருந்து ஒத்துழைப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)