காங்கேசன்துறை- கொழும்பு கோட்டை தபால் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கும் இடையிலான தினசரி இரவு நேர தபால் ரயில் சேவை இன்று (19) ஆம் திகதி நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 20.00 மணிக்கு புறப்பட்டுள்ள ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை அதிகாலை 5.29 மணிக்கு வந்தடைவதுடன் காங்கேசன்துறையை அதிகாலை 6.17 இற்கு சென்றடையும்.

காங்கேசன்துறையில் இருந்து இரவு 18.00 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை 18.45 மணிக்கு சென்றடைவதுடன் 19.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 4.00 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் locomotive இன்ஜினுடன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ICF ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 ஆம் வகுப்பு பெட்டிகள், 3 ஆம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்படுவதுடன் மேலதிகமாக இதுவரை காலமும் இல்லாதிருந்த உறங்கல் படுக்கை(Berth) வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இருக்கை முன்பதிவு வசதியும் செய்யமுடியும்.

1ம் வகுப்பு (குளிரூட்டப்பட்டது)3200/-
2ம் வகுப்பு (ஒதுக்கப்பட்டது) 2200/-
3ம் வகுப்பு (ஒதுக்கப்பட்டது) 1800/-
(காங்கேசன்துறை/வவுனியா/கொழும்பு)
சாதாரண 3 ஆம் வகுப்பு கட்டணம் கட்டணம் 580/-

காங்கேசன்துறை- கொழும்பு கோட்டை தபால் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More