
posted 29th May 2022
கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு மரதன் ஓட்ட நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கிளிநொச்சியிலும் மரதன் ஓட்ட நிகழ்வு.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 29.05.2022 இன்றைய தினம் பிரித்தானியா எடின்புரோ நகரத்தில் நடைபெறும் வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு மரதன் ஓட்ட நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கிளிநொச்சியிலும் மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த மரதன் ஓட்ட நிகழ்வு பரந்தன் சந்தியில் இருந்து பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது. ஆண் ,பெண் இருபாலருக்கும் மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் அரசியலுக்கும் மரதனுக்கும் நிறைய தொடர்பு உண்டு என்று கூறுகின்றேன் என்றால் நீண்ட நேரம் நின்று பிடிக்க வேண்டும். மரதன் வாழ்க்கைக்காக பல தத்துவங்களை கொண்டுள்ளது என தெரிவித்தார்.

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY