
posted 3rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கல்முனைக் கல்விக் கோட்ட தமிழ் மொழி தினப் போட்டி!
அகில இலங்கை தமிழ் மொழித்தினத்திற்கான கல்முனைக் கல்வி மாவட்ட தமிழ் மொழி தினப் போட்டி இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை அல் - மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மற்றும் திருக்கோவில் ஆகிய நான்கு கல்வி வலயங்களின் போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த மாவட்ட மட்ட போட்டி நிகழ்வின் ஆரம்ப விழா, சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்றது .
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதம அதிதி தேசியக் கொடி ஏற்றியதும், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஏனைய கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)