கறுப்புப்பட்டிகள்

நிந்தவூர் பிரதேச சபையின், 49 ஆவது கூட்ட அமர்வில் சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்களும் கறுப்புப்பட்டிகள் அணிந்து கலந்து கொண்டனர்.

தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபை சபா மண்டபத்தில் குறித்த 49 ஆவது கூட்ட அமர்வு இடம் பெற்றபோது, ஆளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இவ்வாறு கறுப்புப்பட்டிகள் அணிந்தவாறு அமர்வில் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசும் ஆட்சியை விட்டும் அகல வேண்டுமென்பதை வலியுறுத்தியும்,

அரசின் தீர்க்கதரிசனமற்ற, முறையான கொள்கையற்ற, வல்லுனர்களைப் புறக்கணித்த செயற்பாடுகளால் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடிகளால் நாட்டு மக்கள் அடைந்துவரும் என்றுமில்லா அவலங்களை எடுத்துக்காட்டவுமே தாம் கறுப்புப்பட்டிகளை அணிந்து சபை அமர்வில் கலந்து கொள்வதாக தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உறுப்பினர்கள் சார்பில் அமர்வில் விளக்கமளித்தார்.

இதேவேளை நாட்டின் இன்றைய நிலமைகள், மக்கள்படும் பெரும் துன்பங்கள், மக்களின் கோரிக்கையும் ஆட்சியினரின் அராஜக, விடாப்பிடி செயற்பாடுகள் தொடர்பிலும் உறுப்பினர்கள் உரையாற்றினர்.

தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் சபை அமர்வில் குறித்த விடயத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“நாட்டில் இன்று அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டங்கள் நாளுக்கு நாள் வீரியமிக்கதாகவும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஆட்சியில் மாற்றம் வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகவுமுள்ளது.

ஆனால் தமக்கு 69 இலட்சம் மக்களின் ஆணையிருப்பதாக அகங்காரம் கொண்டு அடம் பிடித்துவரும் ஆட்சியினர் அதே ஆணை தந்த மக்களே வீதிக்கு இறங்கி ஆட்சியை விட்டும் வெளியேறுங்கள் எனப் போராடிவரும் உண்மையை உணர மறுத்து வீண்வாதம் புரிவது வேடிக்கையானதும், விசமத்தனமானதுமாகும்.

இந்த வகையில் நான்கு இன மக்களும் உண்மை நிலமைகளைப் புரிந்து ஒன்றுபட்டு நிற்பதுடன், திட்டமிட்ட இனவாத செயற்பாடுகள் மூலமே ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனரென்ற உண்மையிலும் தெளிவுகண்டுள்ளனர்.

எனவேதான மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், மக்களின் இன்றைய அவலங்களை எடுத்துக்காட்டவுமே நாம் இன்று கறுப்புபட்டிகள் அணிந்து இன்றைய சபை அமர்வில் கலந்து கொள்கின்றோம்” என்றார்.

உறுப்பினர்களான எம்.ரி.எம்.சப்றாஸ், எம்.ரி.பாத்திமா றிகானா உட்பட மேலும் பலரும் உரையாற்றினர்.

கறுப்புப்பட்டிகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY