
posted 1st July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கரடியனாறில் கோர விபத்து இளம் குடும்பஸ்தர் மரணம்
மோட்டார் சைக்கிள் - வான் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததாக மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் - பதுளை வீதியில் இடம்பெற்றது.
குறித்த விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தார்.
இவர் தொழில் நிமித்தம் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த வான் பாதை மாறி குறித்த குடும்பஸ்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இம்பெற்றது.
வான் சாரதியின் தூக்கமே விபத்துக்கு காரணமென பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த மரண விசாரணை அதிகாரி, விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பில் கரடியனாறு பொலிஸார், வான் சாரதியைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)