
posted 6th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள்
கதிர்காமத்துக்கான பாதயாத்திரிகர்கள் நலன் கருதி கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்கள் உகந்தை மற்றும் குமண போன்ற இடங்களில் நடைபெற்றன.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமின்போது, 2000 பாதயாத்திரிகர்களின் தாக சாந்திக்கான குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் ஆகியோரின் அறிவுறுத்தல்களின் படி 1000 பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் மருந்து, உடல் உபாதைகளை நீக்கக்கூடிய மருந்துகள் மற்றும் உடல் வலிகளைப் போக்கும் ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்று கதிர்காமம் பாதயாத்திரிகர்களுக்கான சிறந்த சேவைகளை வழங்கினர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)